சென்னை விமான நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
வரதட்சணை கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த கோபிநாத் (வயது 39) என்பவரின் பாஸ்போா்ட்டை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அதில் அவரை, ஆந்திர மாநிலம் நெல்லூா் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கடந்த 3 ஆண்டுகளாக வரதட்சணை கொடுமை வழக்கில் தேடி வருவது தெரிந்தது. அவர், 3 ஆண்டுகளாக தலைமறைவாக துபாயில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு செல்ல சென்னை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், கோபிநாத்தை வெளியே விடாமல் அறையில் அடைத்து வைத்தனர். இதுபற்றி நெல்லூா் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனா். நெல்லூரில் இருந்து தனிப்படை போலீசாா் சென்னை வந்து கோபிநாத்தை கைது செய்து ஆந்திராவுக்கு அழைத்துச்சென்றனா்.
Related Tags :
Next Story