உத்தரபிரதேசத்தில் வன்முறை: விவசாயிகளையும், எதிர்க்கட்சிகளையும் நசுக்குவது பா.ஜனதாவின் புதிய யுக்தியா? சஞ்சய் ராவத் கேள்வி


உத்தரபிரதேசத்தில் வன்முறை: விவசாயிகளையும், எதிர்க்கட்சிகளையும் நசுக்குவது பா.ஜனதாவின் புதிய யுக்தியா? சஞ்சய் ராவத் கேள்வி
x
தினத்தந்தி 5 Oct 2021 2:06 PM IST (Updated: 5 Oct 2021 2:06 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளையும், எதிர்க்கட்சிகளையும் நசுக்குவது பா.ஜனதாவின் புதிய யுக்தியா என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார்.

மும்பை, 

உத்தரபிரதேசத்தில் லகிம்பூர் கேரியில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் போராட்டதின் போது வன்முறை வெடித்தது. அப்போது மத்திய மந்திரியின் மகன் காரை கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மோதியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:-

மும்பை சாக்கிநாக்காவில் கடந்த மாதம் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தபோது பா.ஜனதா அதைவைத்து பெரும் சர்ச்சையை எழுப்பியது. நாங்கள் (மாநில அரசு) குற்றம் நடந்த இடத்திற்கு யாரும் செல்வதை தடுக்கவில்லை.

லகிம்பூர் கேரியில் ஒரு மந்திரியின் மகன் காரை விவசாயிகள் மீது ஏற்றுகிறார். இத்தகைய கொடுமையான எண்ணம் எங்கிருந்து வருகிறது?

காங்கிரஸ் பொது செயலாளர் பிரயங்கா காந்தி மற்றும் பிற தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களை காண லகிம்பூர் கேரிக்கு செல்லும்போது பா.ஜனதா அரசால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். விவசாயிகளை ஒடுக்கி, அவர்களுக்கு துணை நிற்கும் எதிர்க்கட்சி தலைவர்களின் குரல்களை நசுக்கும் புதிய யுக்தி பா.ஜனதாவிடம் உள்ளதா?

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் நலன்களை பற்றி பேசுகிறார். அதேநேரத்தில் பா.ஜனதா தலைமையிலான மாநில அரசு விவசாயிகள் மீது கார்களை ஏற்றி கொல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சுதந்திர போராட்டத்தின்போது மும்பையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சியாளர் பாபு ஜெனுவின் மீது ஆங்கிலேயர்கள் டிரக் ஏற்றி கொன்ற சம்பவத்தை லகிம்பூர் கேரி சம்பவத்துடன் சஞ்சய் ராவத் ஒப்பிட்டார்.

Next Story