சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இலவச மருத்துவ முகாம்; 278 பேருக்கு பரிசோதனை
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தனியார் ஆஸ்பத்திரியுடன் இணைந்து பல்வேறு மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச பொது சுகாதார மருத்துவ முகாம் நடத்தியது.
அந்த வகையில் நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் திருவொற்றியூர் மெட்ரோ மற்றும் விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் என காலையில் 132 பேர், மாலையில் 146 பேர் என மொத்தம் 278 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.
இதேபோல் நாளை (புதன்கிழமை) உயர்நீதிமன்றம் மெட்ரோ, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், வரும் 8-ந் தேதி புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ, வடபழனி மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் இலவச மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story