தனது பேச்சை மீறி மனைவி ஊருக்கு சென்றுவிட்டதால் விரக்தி; வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


தனது பேச்சை மீறி மனைவி ஊருக்கு சென்றுவிட்டதால் விரக்தி; வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Oct 2021 4:18 PM IST (Updated: 5 Oct 2021 4:18 PM IST)
t-max-icont-min-icon

விரக்தி அடைந்த சந்திரசேகர், மதுபோதையில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுரவாயல் சக்கரபாணி நகர், 14-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 31). இவர், பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ரம்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரம்யா, அரக்கோணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஊருக்கு செல்ல வேண்டும் என்றார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சந்திரசேகர், ஊருக்கு செல்ல வேண்டாம் என மனைவியிடம் கூறினார். ஆனால் கணவர் பேச்சையும் மீறி ரம்யா, தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அரக்கோணம் புறப்பட்டு சென்று விட்டார்.

இதனால் விரக்தி அடைந்த சந்திரசேகர், மதுபோதையில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story