சாத்தான்குளத்தில் சமூகவலைதளத்தில் கத்தியுடன் போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது
சாத்தான்குளத்தில் சமூக வலைதளத்தில் கத்தியுடன் போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு உடபட்ட பகுதியில் கையில் ஒருவர் கத்தியை பெரிய கத்தியுடன் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக செல்போனில் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார். இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மேற்பார்வையில், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதில், அந்த நபர் சாத்தான்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் ரூபன் கிதியோன் (வயது 42) என்றும், கடந்த 4-ந்தேதி அவரது வீட்டின் மொட்டை மாடியில் வைத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கையில் பயங்கரமான கத்தியுடன் அருகில் மது பாட்டிலுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து அதை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபன் கிதியோனை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story