செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 154 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 359 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 2,679 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக திருக்கழுக்குன்றத்தில் 256 வாக்கு சாவடி மையங்களும், புனிததோமையர் மலையில் 358 வாக்கு சாவடி மையங்களும், லத்தூரில் 162 வாக்கு சாவடி மையங்களும், திருப்போரூரில் 288 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1,064 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது. இதில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க 120 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் வெப் ஸ்ட்ரிமிங் கேமராக்கள் மூலமாகவும், வீடியோ கேமராக்கள் மூலமாகவும் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் அதன் மூலமாக வாக்குப்பதிவு நிகழ்வுகள் பதிவு செய்யப்படவுள்ளது. மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story