உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் இடங்கள் அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள்  மூடப்படும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Oct 2021 8:06 PM IST (Updated: 5 Oct 2021 8:06 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது

தூத்துக்குடி:
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் இடங்களை கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி தேர்தல்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலும், தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு தற்செயல் உள்ளாட்சி தேர்தலும் நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை), 2-ம் கட்ட வாக்குப்பதிவு 9-ந் தேதி நடக்கிறது. இந்த நாட்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. 
டாஸ்மாக் கடைகள் மூடல்
அதன்படி இன்று (புதன்கிழமை) கொடியங்குளம், அய்யனாரூத்து பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று முழுவதும் மூடப்படுகிறது. 
வருகிற 9-ந் தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு குலசேகரப்பட்டினம், தருவைகுளம், பரிவல்லிக்கோட்டை, குறுக்குச்சாலை, காயாமொழி, மெஞ்ஞானபுரம், அய்யனேரி, இளையரசனேந்தல் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 9-ந் தேதி வரையும் மூடப்படுகிறது.
இதே போன்று 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திருச்செந்தூர், உடன்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. இந்த நாட்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story