பிரியங்கா காந்தி கைதை கண்டித்து தர்மபுரியில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பிரியங்கா காந்தி கைதை கண்டித்து தர்மபுரியில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2021 8:18 PM IST (Updated: 5 Oct 2021 8:18 PM IST)
t-max-icont-min-icon

பிரியங்கா காந்தி கைதை கண்டித்து தர்மபுரியில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தர்மபுரி:
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி காமராஜர் பவன் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் கோவி சிற்றரசு தலைமை தாங்கினார். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் தீர்த்தராமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் உத்தரபிரதேச அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த மத்திய மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதில் கட்சியின் மாவட்ட பொருளாளர் முத்து, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சென்னகேசவன், பொதுச்செயலாளர் தங்கவேல், மாவட்ட துணைத்தலைவர் சிவலிங்கம், மாவட்ட பிற்பட்டோர் பிரிவு தலைவர் நவீன், வட்டார தலைவர்கள் காமராஜ், சரவணன், ஜனகராஜ், முனுசாமி, வடிவேல், விஸ்வநாதன், கட்சி நிர்வாகிகள் ஆனந்தன், காவேரிம்மாள், ஜெய்சங்கர், வேடியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் கம்பைநல்லூர் நகர தலைவர் குமரவேல் நன்றி கூறினார்.

Next Story