தியாகதுருகம் அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் மனைவி தற்கொலை


தியாகதுருகம் அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 5 Oct 2021 10:03 PM IST (Updated: 5 Oct 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

கண்டாச்சிமங்கலம்

கூட்டுறவு வங்கி ஊழியர்

கள்ளக்குறிச்சி அருகே க.அலம்பலம் பகுதியை சேர்ந்தவர்  இளவரசன்(வயது 41). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள திருக்கோவிலூர் நகர கூட்டுறவு வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளவரசனுக்கும், தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் மகள் கலையரசி(38) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.  கணவன், மனைவி இருவரும் கள்ளக்குறிச்சி கஸ்தூரிபாய் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

பணம் கையாடல்

இந்நிலையில் தான் பணிபுரிந்து வந்த வங்கியில் இளவரசன் பணம் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தனி நபர்களிடமும் பணம் கடன் வாங்கி திருப்பி தராமல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து கலையரசி பல்லகச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். 
இதற்கிடையே தலைமறைவாக இருந்த இளவரசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை தேடி பல்லகச்சேரிக்கு வந்தார். 

மனைவி தற்கொலை

சம்பவத்தன்று முருகேசன், அவரது மனைவியுடன் வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் கலையரசி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசன் கலையரசியை தூக்கில் இருந்து இறக்கினார். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக   இறந்துவிட்டார். 
இதுகுறித்த தகவலின் பேரில் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கலையரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் விசாரணை

இது குறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசியின் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story