முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு


முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 5 Oct 2021 10:30 PM IST (Updated: 5 Oct 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தேனி: 

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை. ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு, கடந்த 2-ந்தேதி அணையின் நீர் மட்டம் 127.40 அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 938 கன அடியாகவும் இருந்தது. 

இந்நிலையில் தொடர் மழையால் நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 205 கனஅடியாக அதிகரித்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 128.10 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


Related Tags :
Next Story