மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு
28 பேருக்கு கொரோனா
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 63 ஆயிரத்து 528 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 28 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் சென்னையில் இருந்து கம்மாபுரம் வந்த ஒருவருக்கும், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 4 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 23 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 62 ஆயிரத்து 311 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 32 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் இது வரை 859 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்த 290 பேர் கடலூர் மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும், 64 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 2 இடங்களில் கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. அந்த இடங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story