காரில் கடத்திய 300 மதுபாட்டில்கள் பறிமுதல்


காரில் கடத்திய 300 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Oct 2021 10:52 PM IST (Updated: 5 Oct 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே காரில் கடத்திய 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.

சீர்காழி:
சீர்காழி அருகே காரில் கடத்திய 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவிடைக்கழி என்ற இடத்தில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திருவிடைக்கழியில் இருந்து கொளக்குடி நோக்கி வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர். 
 இதில் காரில் 300 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது.இதை தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
5 பேர் கைது
 விசாரணையில் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தங்குடி கிராமம் பாண்டவரும் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் சுந்தர்ராஜன் (வயது30), அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் வெங்கடேசன் (31), அன்பழகன் மகன் கண்ணதாசன் (21), பெரியான் மகன் மகேந்திரன் (31), மயிலாடுதுறை மாவட்டம் நெடுவாசல் கிராமம் காலனி தெருவை சேர்ந்த சதீஷ் (22) என்பதும், இவர்கள் 5 பேரும் காரைக்கால் பகுதியில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர

Next Story