ஆரணியில் டவுன் பஸ்களில் பள்ளி சீருடை அணிந்து வந்த இளைஞர்கள்


ஆரணியில் டவுன் பஸ்களில் பள்ளி சீருடை அணிந்து வந்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 5 Oct 2021 11:45 PM IST (Updated: 5 Oct 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் இலவச பயணத்திற்காக பள்ளி சீருடை அணிந்துவந்த இளைஞர்களிடம் பள்ளியின் பெயர், தலைமை ஆசிரியர் குறித்து கேட்டதால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி

ஆரணியில் இலவச பயணத்திற்காக பள்ளி சீருடை அணிந்துவந்த இளைஞர்களிடம் பள்ளியின் பெயர், தலைமை ஆசிரியர் குறித்து கேட்டதால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களுக்கு இலவச பயணம்

தமிழ்நாட்டில் அரசு பஸ்களில் இலவசமாக செல்ல பள்ளி மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவ- மாணவிகளுக்கு பஸ்பாஸ் வழங்கப்படவில்லை. பள்ளி சீருடை அணிந்துவந்தால் போதும் அவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரணியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப்பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆரணியில் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் அரசு டவுன் பஸ்களில் பள்ளிகளுக்கு இலவசமாக சென்று வருகின்றனர். 

சீருடை அணிந்து வந்த இளைஞர்கள்

மாணவர்களை போலவே இளைஞர்கள் சிலர் பள்ளி சீருடை அணிந்து பஸ்சில் இலவசமாக சென்று வருவதாகவும், அவர்கள் மாணவிகள் மற்றும் பெண் பயணிகளை கிண்டல் செய்து வருவதாகவும் புகார் எழுந்தது. 

இந்த நிலையில் ஆரணி - தேவிகாபுரம் செல்லும் டவுன் பஸ்சில் பள்ளி சீருடை அணிந்துவந்த இளைஞர்களிடம், அவர்கள் படிக்கும் பள்ளியின் பெயர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் பெயர் குறித்து பஸ் கண்டக்டர் கேட்டுள்ளார். 
இதனால் அந்த இளைஞர்கள் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story