ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2021 12:02 AM IST (Updated: 6 Oct 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை

உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். 
ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பிரியங்கா காந்தியை கைது செய்த, உத்தரபிரதேச முதல்-மந்திரியை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story