சின்னாளப்பட்டி அருகே பழ மூட்டைகளுக்குள் மறைத்து புகையிலை பொருட்கள் கடத்தல்


சின்னாளப்பட்டி அருகே பழ மூட்டைகளுக்குள் மறைத்து புகையிலை பொருட்கள் கடத்தல்
x
தினத்தந்தி 6 Oct 2021 12:21 AM IST (Updated: 6 Oct 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

சின்னாளப்பட்டி அருகே பழ மூட்டைகளுக்குள் மறைத்து ைவத்து புகையிைல ெபாருட்களை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சின்னாளப்பட்டி:
சின்னாளப்பட்டி அருகே பழ மூட்டைகளுக்குள் மறைத்து ைவத்து புகையிைல பொருட்களை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். 
புகையிலை பொருட்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபகாலமாகவே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து லாரி, பஸ்களில் புகையிலை பொருட்கள் கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. ரெயில்களிலும் புகையிலை பொருட்கள் கடத்திவரப்படுகின்றன. 
இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து மதுரைக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சின்னாளப்பட்டி அருகே திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக பழங்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் தர்பூசணி, அன்னாசி, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்கள் 20 மூட்டைகளில் இருந்தது. பின்னர் லாரியில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். 
பழங்களுக்குள் மறைத்து...
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் ஏற்றிவந்த பழ மூட்டைகளை ஆய்வு செய்தனர். அப்போது பழ மூட்டைகளில் இருந்து புகையிலை பொருட்கள் வாசனை வந்தது. இதைத்தொடர்ந்து பழ மூட்டைகளை போலீசார் அகற்றி பார்த்தபோது, அதற்குள் 27 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் விசாரணையில், லாரியில் வந்தவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் பிரசாத் (வயது 29), ஈஸ்வரன் (23) என்பது தெரியவந்தது. 
இதையடுத்து அந்த லாரியை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பறிமுதல் செய்து, அம்பாத்துரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதேபோல் லாரியில் வந்த 2 பேரும் அங்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்கிடையே புகையிலை பொருட்கள் பிடிபட்டது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் அம்பாத்துரை போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து, லாரியில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்களை ஆய்வு செய்தனர். 
2 பேர் கைது
பின்னர் இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த பிரசாத், ஈஸ்வரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் கடத்துவதையும், விற்பனை செய்வதையும் தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் லாரியில் பழ மூட்டைகளுக்குள் மறைத்து வைத்து மதுரைக்கு கடத்தப்பட்ட புகையிலை பொருட்களை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் 27 மூட்ைடகளில் 1 டன் அளவிலான புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இனிவரும் காலங்களில் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து இதே குற்ற செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றார்.

Next Story