நாய்கள் கடித்து 5 ஆடுகள் சாவு
வடபாதிமங்கலத்தில் நாய்கள் கடித்து 5 ஆடுகள் இறந்தன.
கூத்தாநல்லூர்:
வடபாதிமங்கலத்தில் நாய்கள் கடித்து 5 ஆடுகள் இறந்தன.
5 ஆடுகள் சாவு
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்வதற்கு ஆடுகள் வளர்த்து வருகின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளை அந்த பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
இந்தநிலையில் வடபாதிமங்கலம் போலீஸ் நிலையம் பின்புறத்தில் உள்ள தரிசு நிலத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 5-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கு வந்து ஆடுகளை விரட்டி கடித்து குதறின. இதில் காயம் அடைந்த ஆடுகளை சிகிச்சைக்காக சாத்தனூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அதில் 5 ஆடுகள் இறந்தன.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து ஆடுகள் வளர்போர் கூறுகையில், காயம் அடைந்த 6 ஆடுகளுக்கு வடபாதிமங்கலம் கால்நடை டாக்டர் வெங்கட் சிகிச்சை அளித்து வருகிறார். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை தொடர்ந்து நாய்கள் விரட்டி கடிப்பதால், பெரும் நஷ்டத்தை நாங்கள் சந்திக்க வேண்டி உள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள், ஆடுகளை கடித்து வரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story