பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவி கலா முருகேசன் தலைமை தாங்கினார். துணை தலைவி சித்ரா வரவேற்றார். இதில் மாவட்ட பொருளாளர் அருள்மேரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி, வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி உள்ளிட்ட நிர்வாகிகள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story