திருச்சி விமான நிலையத்தில் ரூ.59 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.59 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு
சிங்கப்பூர், துபாய், மலேசியா, மஸ்கட், ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும், இங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் ஒரு சில பயணிகள் தங்கம் கடத்தி வருவதும், அவர்கள் அதிகாரிகளின் பிடியில் சிக்கிக் கொள்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்து சில அதிகாரிகள் வெளியிடங்களுக்கு மாற்றப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை துபாயில் இருந்து ஒரு விமானம் திருச்சி வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் (வயது 38) என்ற பயணி கடத்தி வந்த ரூ.33 லட்சம் மதிப்பிலான 695 கிராம் தங்கமும், அதேஊரைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (24) என்ற பயணி கடத்தி வந்த ரூ.26.30 லட்சம் மதிப்பிலான 555 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஒரேநாளில் ரூ.59.30 லட்சம் மதிப்பிலான 1,250 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story