காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்
உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சாயல்குடி வேலுச்சாமி, பொருளாளர் ராஜாராம் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முருகபூபதி ஆகியோர் பேசினர். நகர் தலைவர்கள் கோபி, அஜ்மல்கான், வட்டார தலைவர்கள் திருப்புல்லாணி சேதுபாண்டியன், மாவட்ட துணை தலைவர் ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பாரிராஜன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஹாஜா, செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், நகர் துணை தலைவர் ஜெயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story