மகாளய அமாவாசையையொட்டி இன்று ராமேசுவரத்தில் புனித நீராட தடை


மகாளய அமாவாசையையொட்டி இன்று ராமேசுவரத்தில் புனித நீராட தடை
x
தினத்தந்தி 6 Oct 2021 1:47 AM IST (Updated: 6 Oct 2021 6:43 AM IST)
t-max-icont-min-icon

மகாளய அமாவாசையையொட்டி இன்று (புதன்கிழமை) ராமேசுவரத்தில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ராமேசுவரம்,

தை மற்றும் ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி, தர்ப்பண பூஜை செய்து சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மகாளய அமாவாசை இன்று (புதன்கிழமை) வருகிறது. 
இதையொட்டி கொரோனா பரவல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, ராமநாத சுவாமி கோவில் பகுதியில் பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக நேற்றும், இன்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்னி தீர்த்த கடற்கரைக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் தடுப்பு கம்பிகள் மற்றும் தகரத்தால் மறைத்து அடைக்கப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதைப்போல் தனுஷ்கோடி கடற்கரை செல்லவும், திருப்புல்லாணி அருகே சேதுக்கரை, தேவிபட்டினம், மாரியூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் இன்று புனித நீராடி தர்ப்பண பூஜை செய்யவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story