‘தினத்தந்தி’ புகார் பெட்டி- சாலை சீரமைக்கப்படுமா?


‘தினத்தந்தி’ புகார் பெட்டி- சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 5 Oct 2021 8:53 PM GMT (Updated: 5 Oct 2021 8:53 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டி- சாலை சீரமைக்கப்படுமா?

அருமனை-மஞ்சாலுமூடு செல்லும் சாலை சேதமடைந்து பல மாதங்களாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                 -சங்கர், கைதகம்.
மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
தோவாளை அருகே கோழிக்கோட்டு பொத்தையில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும 2 மின் கம்பங்களில் ஒன்று சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தவாறு காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும்.
                               -சுந்தர், கோழிக்கோட்டு பொத்தை.
சுகாதார சீர்கோடு
கோட்டார் முதலியார்விளை சேவியர் காலனியில் கழிவுநீர் ஓடையானது பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                        -அருள், முதலியார்விளை.
வடிகால் ஓடை அமைக்கப்படுமா?
அருமனையில் இருந்து தெற்றிவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மழுவஞ்சேரி பகுதியில் சாலையோரம் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, வடிகால் ஓடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                     -விஜயகுமார், மழுவஞ்சேரி.
நடைபாதை சுத்தப்படுத்தப்படுமா?
ராஜாக்கமங்கலம் அருகே பிள்ளைத்தோப்பில் லெமூர் பீச் உள்ளது. இந்த பீச் பகுதிக்கு வரும் மக்களின் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த நடைபாதை கடல் அலை சீற்றத்தால் மணல் மூடி கிடக்கிறது. எனவே, அதிகாரிகள் மணல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                 -அபினேஷ், பிள்ளைதோப்பு.
வேகத்தடை தேவை
சுசீந்திரத்தில் இருந்து நல்லூர் கிராமம் செல்லும் சாலையில் இளையநயினார்குளம் உள்ளது. இந்த குளத்தில் அருகில் சாலை வளைந்து செல்கிறது. அந்த பகுதியில் அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, குளம் உள்ள பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                   -அனந்தநாராயணன், மருங்கூர்.
சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்
குழித்துறை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட இளஞ்சிறையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர்  அமைக்கப்படாமல் உள்ளது. எனவே, மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                           -பினோ, இளஞ்சிறை.

Next Story