1 மணி நேரம் பலத்த மழை
சிவகாசி பகுதிகளில் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி பகுதிகளில் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பலத்த மழை
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது.
சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இந்த மழை நீடித்தது. இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் சென்று வந்தனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
பின்னர் மீண்டும் மாலையில் மழை பெய்தது. சிவகாசியை சுற்றியுள்ள பகுதியில் மட்டும் மழை பெய்த நிலையில் நகரப்பகுதியில் மேகமூட்டம் மட்டும் காணப்பட்டது.
கிராம பகுதிகளில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story