செல்போன் கோபுரம் அமைத்து தருவதாக பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி


செல்போன் கோபுரம் அமைத்து தருவதாக பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 6 Oct 2021 3:40 AM IST (Updated: 6 Oct 2021 3:40 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் கோபுரம் அமைத்து தருவதாக பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி

நெல்லை:
நெல்லையில், செல்போன் கோபுரம் அமைத்து தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
செல்போன் அழைப்பு
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் தங்கம் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணபிரியா (வயது 43). இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் தான் ஒரு குறிப்பிட்ட செல்போன் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி உள்ளார். பின்னர் அவர், உங்கள் நிலத்தை செல்போன் கோபுரம் அமைக்க எங்களுக்கு வாடகைக்கு  கொடுத்தால் மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் உங்களுக்கு வாடகை கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதற்கு முன் பணமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் தர வேண்டும், என்று கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய கிருஷ்ணபிரியா இணையதளம் மூலம் அந்த நபருக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அந்த நபர் கிருஷ்ண பிரியாவை தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் கிருஷ்ணபிரியா அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் கிருஷ்ணபிரியாவுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
வெளிநாட்டில் வேலை
இதேபோல் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (27). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். பின்னர் அந்த நபர் அந்தோணிராஜிக்கு ஆன்லைனில் குறிப்பிட்ட நிறுவனத்தின் பணி நியமன ஆணை போன்று ஆணை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு ரூ.35 ஆயிரம் வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பிய அந்தோணிராஜ், அந்த நபரின் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி உள்ளார். அதன் பிறகு அந்த நபர் அந்தோணிராஜை தொடர்பு கொள்ளவில்லை. அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
ஆபாச படங்கள்
இதைபோல் முக்கூடல் அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த பெண்ணின் செல்போன் எண் மூலம் மர்ம நபர் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை உருவாக்கி, அதன் மூலம் அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து 3 பேரும் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
..............

Next Story