பாளையங்கோட்டை அருகே கிணற்றில் தொழிலாளி பிணம்
கிணற்றில் தொழிலாளி பிணம்
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள அலங்காரபேரியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 50). கூலி தொழிலாளி. கடந்த 2-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவருடைய மனைவி சீவலப்பேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்தப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் நேற்று அவர் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு சீவலப்பேரி போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story