3 நாட்கள்பள்ளிகளுக்கு விடுமுறை


3 நாட்கள்பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 6 Oct 2021 3:51 AM IST (Updated: 6 Oct 2021 3:51 AM IST)
t-max-icont-min-icon

3 நாட்கள்பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்றும் (புதன்கிழமை), வருகிற 9-ந்தேதியும் நடைபெறுகிறது. இதையொட்டி ஆயத்த பணிக்காகவும், வாக்குப்பதிவு பணிக்காகவும் தலா 2 நாட்கள் வீதம், 4 நாட்கள் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். எனவே நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர இன்றும் (புதன்கிழமை), வருகிற 8, 9 ஆகிய தேதிகளிலும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். இந்த தகவலை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

Next Story