பிரியங்கா காந்தி கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை:
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், ம.தி.மு.க. மாவட்ட செலாளர் கே.எம்.ஏ.நிஜாம், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஒபேத் நியுபிகின், வக்கீல் காமராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்கள் உத்தரபிரதேச அரசு மற்றும் மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தென்காசி
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் முரளிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
---------............
Related Tags :
Next Story