புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 Oct 2021 4:42 AM IST (Updated: 6 Oct 2021 4:42 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டி

  ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற
வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள்
தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நடைபாதையில் தேங்கும் கழிவுநீர் 

  நெல்லை பழையபேட்டை 50-வது வார்டு பகுதியில் சுமார் 170-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கழிவு நீர் மக்கள் நடந்து செல்லும் பாதையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

  -பாலசுப்பிரமணியன், பழையபேட்டை.

அரசு மேல்நிலைப்பள்ளி அமையுமா?

  தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி உள்ளது. ஆனால் மேற்கொண்டு பள்ளி படிப்பை தொடர மேல்நிலைப்பள்ளி இல்லை. மேல்நிலைப்பள்ளிக்கு பல கிலோ மீட்டர் தாண்டி செல்ல வேண்டி உள்ளது. இதனால் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள். ஆகவே அங்கு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டுகிறேன்.

  மேலும் அங்குள்ள பெரியகுளம் நீர்ப்பாசனம் செய்ய செல்லும் பாதை மற்றும் பெரியசாமியாபுரம் செல்லும் சாலையில் உள்ள 9 தெரு விளக்குகள் சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

  -கணேசன், கீழக்கலங்கல்.

காட்சி பொருளான குடிநீர் குழாய்கள் 

  கடையநல்லூர் நகராட்சி பஸ் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளின் வசதிக்காக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த குடிநீர் குழாய்கள் தற்போது தண்ணீர் இல்லாமல் காட்சி பொருளாகவே உள்ளது. குடிநீர் குழாய்களை சீரமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

  -வீரா, தென்காசி.

நோய் பரவும் அபாயம்

  கடையம் யூனியன் கீழக்கடையம் பஞ்சாயத்து பாரதிநகர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் வாறுகால் பல நாட்களாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அதில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் ெகாசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வாறுகளை சுத்தம் செய்து சுகாதாரக்கேட்டை நீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

  -திருக்குமரன், கடையம்.

அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

  தென்காசியில் இருந்து மத்தளம்பாறை, கண்டமங்கலம், புளிச்சிகுளம், முப்புலியூர், புல்லுக்காட்டுவலசை, மடத்தூர், சிவநாடானூர், நாட்டார்பட்டி, பூவனூர் வழியாக முத்துமாலைபுரத்திற்கு தடம் எண் 6 ஏ அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சிரமப்படுகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

  -ஞானசேவியர், தென்காசி.

மின்விளக்கு வசதி வேண்டும்

  தூத்துக்குடி மேம்பாலம் புதியம்புத்தூர் விலக்கில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் இருளில் நிற்கும் அவலம் உள்ளது. எனவே அங்கு மின் விளக்கு வசதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

  -அருள்ராஜ், புதியம்புத்தூர்.

குடிநீர் குழாயில் உடைப்பு

  குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பஞ்சாயத்து நாடார் தெரு மற்றும் தேவர் தெரு செல்லும் வழியில் மெயின் ரோட்டுக்கு அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 3 மாதங்களாக இந்த உடைப்பு சரிசெய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் அங்கு தேங்கி கிடக்கிறது. மேலும் அங்கு தெரு விளக்குகளும் எரியவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

  -சேசுராஜ், சேதுக்குவாய்த்தான்.

பயணிகள் நிழற்கூடம் மீண்டும் கட்டப்படுமா?

  கோவில்பட்டி தாலுகா முக்கூட்டுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கஸ்தூரிரெங்கபுரத்தில் பயணிகள் நிழற்கூடம் பழுடைந்த காரணத்தால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் அங்கு இன்னும் புதிதாக நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதனால் அங்குள்ள மரத்தடியில் நின்று பயணிகள் பஸ் ஏறி செல்கிறார்கள். ஆகவே அங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டிடத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  -ஜெயச்சந்திரன், கஸ்தூரிரெங்கபுரம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

  தூத்துக்குடி முருகன் கோவில் தெருவில் கடைசியில் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

  -முருகேசன், தூத்துக்குடி.

  

Next Story