தாளவாடியில் யூரியா வாங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை
தாளவாடியில் யூரியா வாங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டார்கள்.
தாளவாடி
தாளவாடியில் யூரியா வாங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டார்கள்.
யூரியா உரம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் விவசாயிகள் மக்காசோளம், ராகி பயிர் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம், 2 ஆயிரம் ஏக்கரில் ராகி சாகுபடி செய்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்துவருவதால் இந்த நேரத்தில் பயிர்களுக்கு யூரியா உரம் வைத்தால் செழுமையாக வளரும். ஆனால் கடந்த சில வாரங்களாக தாளவாடி பகுதியில் தனியார் உரக்கடை மற்றும் கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.
பலருக்கு கிடைக்கவில்ைல
இந்தநிலையில் நேற்று காலை தாளவாடி வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு யூரியா உரம் வந்தது. இதை அறிந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உரம் வாங்க காலை 6 மணிக்கே வங்கி முன் குவிந்து முற்றுகையிட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம் 180 மூட்டை மட்டுமே யூரியா உரம் வந்திருந்தது. இதனால் ஒருவருக்கு ஒரு மூட்டை மட்டுமே வழங்கப்பட்டது.
இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, ஒரு ஏக்கர் மக்காச்சோள பயிருக்கு 3 மூட்டை உரம் தேவை. தற்போது ஒரு மூட்டை உரம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் பலருக்கு கிடைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனே இதை கவனித்து தாளவாடி மலைப்பகுதி விவசாயிகளுக்கு கூடுதலாக யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்கள்.
Related Tags :
Next Story