நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாமக்கல்,
உத்தரபிரதேச மாநிலத்தில் விபத்தில் பலியான விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரியும், பா.ஜனதா அரசை கண்டித்தும் நேற்று நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜி.ஆர்.சுப்பிரமணியம், வி.பி.வீரப்பன், பாச்சல் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜனதா அரசை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் வட்டார தலைவர்கள் இளங்கோ, ஜெகநாதன், ரங்கசாமி, ராமசாமி, தங்கராஜ், குப்புசாமி, இருசப்பன், நகர தலைவர்கள் மோகன், முரளி, பொதுக்குழு உறுப்பினர் டி.வி.பாண்டியன் மற்றும் பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story