நகைக்கடை அதிபர் பலி


நகைக்கடை அதிபர் பலி
x
தினத்தந்தி 6 Oct 2021 10:16 PM IST (Updated: 6 Oct 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே வயலுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து நகைக்கடை அதிபர் பலியானார்.

தாராபுரம்
தாராபுரம் அருகே வயலுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து நகைக்கடை அதிபர் பலியானார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகைக்கடை அதிபர்
தாராபுரத்தை சோ்ந்தவா் குமரகுரு (வயது 26). இவா் தாராபுரம் பொியகடை வீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்தநிலையில் இவர் நேற்று காலை தாராபுரம்-அலங்கியம் சாலையில் உள்ள சீத்தக்காடுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.  கொளிஞ்சிவாடி வாய்க்கால் பாலம் வளைவு ஒன்றில் திரும்பியுள்ளாா். அப்போது எதிர்பாராத விதமாக  கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த வயலுக்குள் பாய்ந்தது. 
அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து  நிலைதடுமாறி கீழே விழுந்த குமரகுரு பலத்த காயம் அடைந்தார். சிறிது நேரத்தில்  அங்கேயே பாிதாமாக உயிாிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டா் மணிகண்டன் மற்றும் போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். 
போலீசார் விசாரணை
அவா்கள் குமரகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சு மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திாிக்குஅனுப்பி வைத்தனா். பிரேத பாிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினா்களிடம்ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வயலுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்த விபத்தில் நகைக்கடை அதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story