62 வாகனங்கள் ரூ.7½ லட்சத்துக்கு ஏலம்


62 வாகனங்கள் ரூ.7½ லட்சத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 6 Oct 2021 10:34 PM IST (Updated: 6 Oct 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த 62 வாகனங்கள் ரூ.7½ லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

தேனி: 

தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான குற்ற செயல்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி தேனி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் முன்னிலையில் ஏலம் நடந்தது. 65 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் என மொத்தம் 67 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டன. 

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்துகொண்டு ஏலம் கேட்டனர். ஒவ்வொரு வாகனங்களாக ஏலம் விடப்பட்டன. இறுதியில் மொத்தம் 62 வாகனங்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டன. இந்த வாகனங்கள் மொத்தம் ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்துக்கு ஏலம் போனது. வாகனங்களை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன், ஜி.எஸ்.டி. வரியை செலுத்திவிட்டு வாகனங்களை பெற்றுக் கொண்டனர். இதில் தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

 

Next Story