வாகனங்களில் மோப்ப நாய் மூலம் போலீசார் சோதனை
கம்பத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க மோப்ப நாய் மூலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம், கேரள மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் கம்பம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர். இதை தடுக்க உள்ளூர் போலீசார், போதைப் பொருள் தடுப்பு போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கஞ்சா இல்லாத நகராக கம்பத்தை மாற்ற தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்த போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பதுக்கி வைத்திருக்கும் கஞ்சாவை கண்டறிய மோப்ப நாய் வெற்றியை பயன்படுத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையில் தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் எல்லைப்பகுதியான கோசந்திர ஓடை என்னுமிடத்தில் மோப்ப நாய் வெற்றி மூலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் மோப்பநாய் அந்த வழியாக வந்த அரசு பஸ்களில் பயணிகள் வைத்திருந்த பையையும் சோதனை செய்தது. இதில் கஞ்சா எதுவும் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story