இடி,மின்னலுடன் பலத்த மழை
பரமக்குடி பகுதியில் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பரமக்குடி,
பரமக்குடி பகுதியில் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
பரமக்குடி, பார்த்திபனூர், சத்திரக்குடி உள்பட சுற்றுப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் சென்றது. பொன்னையாபுரம் ெரயில்வே சுரங்கப் பாதைக்குள் மழைநீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் இந்த பாலத்தில் செல்ல முடியாமல் திணறினர்.
பாலத்தின் கீழே வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் கம்பால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மேம்பாலத்தின் வழியாக சுற்றி சென்றனர். தியேட்டர் பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதால் நகரில் சுமார் 1½ மணி நேரம் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது.
சேதம்
பின்பு மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று அதை சரி செய்து மீண்டும் மின் இணைப்பு வழங்கினர். மேலும் இந்த கன மழைக்கு பரமக்குடி அருகே உள்ள கலையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி தாசில்தார் தமிம்ராஜா ஆலோசனையின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி சேத மதிப்பீடு கொடுத்துள்ளார். தொடர்ந்து நேற்றும் பரமக்குடி பகுதியில் பரவலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story