மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபடும் விவசாயிகள்


மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபடும் விவசாயிகள்
x
தினத்தந்தி 6 Oct 2021 11:10 PM IST (Updated: 6 Oct 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் பகுதிகளில் பரவலாக பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கேயம்
காங்கேயம் பகுதிகளில் பரவலாக பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மானாவாரி சாகுபடி
காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் தரிசு நிலங்களில் மானாவாரி பயிர்களான கொள்ளு, நரிப்பயறு, சோளம், மொச்சை, பாசிப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை விதைப்பு செய்து உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவற்றில் சோளம், நரிப்பயறு, கொள்ளு ஆகியவை அடுத்த போகம் விதைப்பு செய்ய விதைக்காக அறுவடை செய்தது போக, அப்படியே மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகளுக்கு உணவாக விடப்படுகிறது. சோளத்தட்டு அளுவடை செய்து சேமித்து வைத்துக் கொள்வது வழக்கம். நரிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை மேய்ச்சல் நிலங்களில் முற்றிய பின்னர் ஆடு, மாடுகளை அதனுள் மேய விடுவது வழக்கம்.கடந்த ஒருவார காலமாகவே விதைப்பு, உழவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் நகர் பகுதியில் உள்ள தானிய மண்டிகளில் விதை தானிய வியாபாரம் களை கட்டியுள்ளது.
மகசூல்
இதுபற்றி விவசாயிகள்  கூறும்போது “நடப்பாண்டு பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. விதைப்பு செய்யப்பட்ட பின்னர் அடுத்த 10 நாட்களுக்கு பிறகு சீரான இடைவெளியில் பருவ மழை பெய்யுமானால் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் பெற்று விடலாம். இந்த ஆண்டு நிச்சயம் போதிய மழை பெய்யும்” என்றனர்.

Next Story