கார் மோதி மூதாட்டி பலி


கார் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 6 Oct 2021 11:20 PM IST (Updated: 6 Oct 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

கார் மோதி மூதாட்டி பலியானார்.

திருப்பத்தூர், 
திருப்பத்தூர் அருகே சவுமியநாராயணபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி தெய்வானை (வயது80). இவர்  தேவரம்பூரில் உள்ள ரேஷன்கடைக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்கி வந்துள்ளார். அவரை குணசேகரன் என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச்ெசன்றுள்ளார். அப்போது திருக்கோஷ்டியூரில் இருந்து வந்த ரணசிங்க புரத்தைச் சேர்ந்த அஜித் என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தெய்வானை திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குணசேகரன் லேசான காயமடைந்தார். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story