தொடர் மழை


தொடர் மழை
x
தினத்தந்தி 6 Oct 2021 11:42 PM IST (Updated: 6 Oct 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

திருப்புவனம், 
திருப்புவனத்தில் மேலூர் பஸ் நிறுத்தம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகிறார்கள். கொரோனா தொற்று காரணமாக தற்போது 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளி செயல்பட்டு வருகிறது. தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே பள்ளி சுற்றுச்சுவர் ஆரம்பிக்கிறது. இதில் பள்ளி வடபுறம் காம் பவுண்டு சுவரை ஒட்டி தெப்பக்குளம் கட்டப்பட்டுள்ளது. தெப்பக்குளத்திற்கும், பள்ளி சுற்றுச் சுவருக்கும் இடையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள சாலை அமைக்கப் பட்டு உள்ளது. திருப்புவனத்தில் நேற்று பகல், மதியம், மாலை என மூன்று முறை மழை பெய்துள்ளது. ஏற்கனவே சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வடபுறம் காம்பவுண்டு சுமார் 25 அடி நீளத்திற்கு உடைந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story