மகாளய அமாவாசையை யொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்


மகாளய அமாவாசையை யொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x
தினத்தந்தி 6 Oct 2021 11:52 PM IST (Updated: 6 Oct 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

மகாளய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தடையை மீறி பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

இந்துக்கள் ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். 

வழக்கமாக திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ஆனால் மகாளய அமாவாசை தினமான நேற்று கொரோனா பரவல் காரணமாக அய்யங்குளக்கரையில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. 

இருப்பினும் நேற்று அதிகாலை முதலே அங்கு மக்கள் குவிந்தனர். அவர்கள் குளக்கரையில் சிவாச்சாரியார்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கொண்டனர். பின்னர் அருகில் உள்ள அருணகிரிநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 

சிவாச்சாரியார்கள் வீடுகளிலும் தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 10 மணி அளவில் அங்கு வந்த போலீசார், தர்ப்பணம் கொடுக்க வந்திருந்த  பொதுமக்களை அங்கிருந்து கலைந்து செல்ல உத்தரவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story