மகாளய அமாவாசையையொட்டி புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் பொதுமக்கள் தர்ப்பணம்


மகாளய அமாவாசையையொட்டி புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் பொதுமக்கள் தர்ப்பணம்
x
தினத்தந்தி 7 Oct 2021 12:08 AM IST (Updated: 7 Oct 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

புதுக்கோட்டை:
மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசையாகும். இதனால் புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தன்று ஏராளமானோர் நீர்நிலைகளில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவர். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நீர் நிலைகளான கடற்கரை, ஆறு, குளங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும் நீர்நிலைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் அனுமதி மறுக்கப்படட்டது. இந்நிலையில் புதுக்கோட்டையில் தர்ப்பணம் செய்யக்கூடிய முக்கிய இடமான சாந்தாரம்மன் கோவில் அருகில் உள்ள பல்லவன் குளத்தில் தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சிலர் வந்து ஏமாற்றத்துடன் சென்றனர். சிலர் தடை உத்தரவையும் மீறி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் பல்லவன் குளம் வழக்கமான பரபரப்பு இன்றி காணப்பட்டது.

Next Story