கடன் தொல்லையால் அவதி; திராவகம் குடித்த சிமெண்டு ஆலை ஊழியர் சாவு
திராவகம் குடித்த சிமெண்டு ஆலை ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேலாயுதம்பாளையம்,
திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன் கிளின்டன்ராஜா (வயது 30). இவர் புகளூர் டி.என்.பி.எல். சிமெண்டு ஆலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் ரூ.40 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் சரிவர கடனை செலுத்த முடியாததால் கிளிண்டன் ராஜா கடந்த சில வாரங்களாக மன வேதனையில் இருந்துள்ளார். இந்தநிலையில் கடன் தொல்லையால் கடந்த 3-ந் தேதி கிளிண்டன் ராஜா வீட்டில் இருந்த திராவகத்தை குடித்துள்ளார். இதையடுத்து, அவர் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கிளிண்டன் ராஜா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story