திமிரி, ஆற்காடு ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.
திமிரி, ஆற்காடு ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது.
ராணிப்பேட்டை
திமிரி, ஆற்காடு ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது.
திமிரி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, திமிரி ஒன்றியங்களில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
திமிரி ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 10 பேரும், 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 64 பேரும், 49 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 143 பேரும், 319 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 765 பேரும் என மொத்தம் 389 பதவிக்கு 982 பேர் போட்டியிட்டனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆண்கள், பெண்கள் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர். மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு நேரம் செல்லச் செல்ல சூடு பிடிக்கத் தொடங்கியது.
மாலை நேரத்தில் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒருசில வாக்குச்சாவடிகளில் நேரத்தை கருத்தில் கொண்டு வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்ற வாக்காளர்கள் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.
அமைதியாக நடந்தது
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமைதியாக வாக்குப்பதிரு நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட, வட்டார தேர்தல் கண்காணிப்பாளர்கள் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
ஆற்காடு
ஆற்காடு ஒன்றியத்தில் 187 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர்.
நேற்று மகாளய அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு 3 மணிக்கு மேல் வாக்களிக்க வந்ததால் மாலையில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு சில இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
ஆற்காடு ஒன்றியம் முப்பது வெட்டி அரசினர் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவரை சக்கர நாற்காலியில் அழைத்து வந்தனர். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story