தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 7 Oct 2021 12:54 AM IST (Updated: 7 Oct 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பூட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையம் 
திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட  வியாழன்மேட்டில் புறக்காவல் நிலையம் கடந்த ஆண்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் திறக்கப்பட்டு அந்த காவல் நிலையத்திற்கு தனியாக போலீசார் நியமிக்கப்பட்டு  மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்தன. இப்பகுதி பல குற்றச் சம்பவம் நடைபெறும் ஒரு பகுதியாக கருதப்பட்டது. பொதுமக்களுக்கும் புகார்கள் அளிக்க எளிதாக இருந்து வந்தது. ஆனால் தற்போது நீண்ட நாட்களாக இந்த புறக்காவல் நிலையம்  திறக்காமல் பூட்டப்பட்டுள்ளது. எனவே இந்த புறக்காவல் நிலையத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நவமணிவேல், சோமரசம் பேட்டை, திருச்சி.

குண்டும், குழியுமான சாலையில் தேங்கும் மழைநீர் 
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் 3000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள சாலைகள்  குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.  மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீரை அகற்றி விட்டு சாலையை சீரமைக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபாலப்பட்டிணம், புதுக்கோட்டை. 

பராமரிக்கப்படாத சிவன் கோவில்கள் 
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் பஞ்சாயத்து நெருஞ்சிக்கோரை கிராமத்தில் இரண்டு சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. இதில் ஒன்று காசிவிஸ்வநாதர் விசாலாட்சி, மற்றொன்று பிரகதீஸ்வரர் அபிராமி. இந்த இரண்டு சிவன் கோவில்களும் அறக்கட்டளை சார்ந்தது தான். ஆனால் பாழடைந்து மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. எனவே இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம். 
விஸ்வநாதன், நெருஞ்சிக்கோரை, அரியலூர்.

கீழே விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம் ,கறம்பக்குடி தாலுகா, ஆலங்குடி ஒன்றியம், பல்லாவராயன் பத்தை அருகே உள்ள புதுவளசல் கொண்டையான் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதனை தாங்கி நிற்கும் தூண்கள் சேதம் அடைந்து சிமெண்டு பூச்சுகள் கீழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
வெகுநாதன், புதுவளசல் கொண்டையான், புதுக்கோட்டை.

சாலையில் வெளியேற்றப்படும் மழைநீர் 
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சிவன் கோவிலில் தேங்கியிருக்கும் மழை நீரை அப்புறப்படுத்த மோட்டார் வைத்து இறைத்து வீதியில் விடுகிறார்கள். இதனால் சாலை சேதமடைந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக இருக்கிறது. எனவே தொல்லியல் துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து சரியான முறையில் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கீரனூர், புதுக்கோட்டை. 

பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா? 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தா. பேட்டை ஊராட்சி ஒன்றியம், அஞ்சலம் ஊராட்சி, நீலியாம்பட்டி காலனிக்கு  அருகில் முசிறி- பவித்திரம் மெயின் ரோட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் கீழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மின்சாரம் இருக்கும் போது இந்த மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சண்முகராஜ்,  நீலியாம்பட்டி, திருச்சி. 

டாஸ்மாக் கடையை திறக்க கூடாது 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரை ஊராட்சியில் புதிதாக வரவிருக்கும் டாஸ்மாக் கடையினால் பள்ளி மாணவ- மாணவிகள், பெண்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் காரை ஊராட்சிக்கு வரவிருக்கும் டாஸ்மாக் கடையை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மணிகண்டன், காரை, பெரம்பலூர். 

தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் 
கரூர் குழந்தைவேல் சாலையிலிருந்து ஆதி விநாயகர் கோவில் தெருவிற்கு செல்லும் சந்தில் உள்ள சாக்கடையில் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகள் தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே உடனடியாக கழிவுநீரில் தேங்கிநிற்கும் குப்பைகளை அகற்றி, கழிவுநீர் தேங்காமல் செல்ல வழிவகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மகேஷ், கரூர்.

வாய்க்கால் கரையோரத்தில் குவியும் குப்பைகள்
திருச்சி மாவட்டம் சமயபுரம் புது பஸ் நிலையம் பின்புறம் புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரத்தில் பேரூராட்சி நிர்வாகத்தில் மூலம் குப்பைகள் கொட்டப்பட்டு தற்போது பெரிய குப்பை மேடாக உள்ளது. இதில் மழை பெய்யும்போது பிளாஸ்டிக் கவர்களில் மழைநீர் தேங்கி அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சமயபுரம், திருச்சி. 

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 61-வது வார்டு அண்ணா தெரு தெற்கு காட்டூர் பகுதியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் பணிகள் முடிந்தும் பாதாள சாக்கடை தொட்டிக்கு மூடி போடாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை வாயிலை மூட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ஏங்கல்ஸ், தெற்கு காட்டூர், திருச்சி. 

வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் 
திருச்சி மாவட்டம், கருமண்டபம் செல்வநகர் 2-வது வீதியில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை உள்ளது. இந்தபாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி அதன்மூடி வழியாக கழிவுநீர் வெளியே வந்து சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுதா, கருமண்டபம், திருச்சி.

அரசு பஸ் விடப்படுமா? 
திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து மேலகொத்தம்பட்டி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, தும்பலம் ஆகிய பகுதிகளில் ஏராளமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த வழியாக கொளக்குடி அல்லது தொட்டியம் வரை அரசு பஸ் விட்டால் அப்பகுதி மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும் பெரிதும் பயன் அடைவார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சேகர், வளையெடுப்பு, திருச்சி. 

கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் சாலையில் தேங்கும் மழைநீர்
திருச்சி வாசன் நகர் 3-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில்  கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் மழைநீர் சாலையில் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில்கொண்டு, சாலை, கழிவுநீர் வாய்க்கால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
முத்துரத்தினம், திருச்சி. 

கூட்டமாக நிற்கும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு 
திருச்சி உறையூர் பகுதியில் பகல், இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் கூட்டமாக காணப்படுகிறது. இவை கூட்டமாக சாலையில் நிற்பதினால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் சிலர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளை மாடுகளின் மீது விட்டு கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பிரபு, உறையூர், திருச்சி. 


Next Story