மின்னல் தாக்கி வாலிபர் பலி


மின்னல் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 7 Oct 2021 1:11 AM IST (Updated: 7 Oct 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

மின்னல் தாக்கி வாலிபர் பலி

சாத்தூர்
ஜார்க்கண்ட் பகுதியை சேர்ந்தவர் பிமல் ஒரான்(வயது 24). இவர் தனது குடும்பத்தினருடன் சாத்தூர் அருகே உள்ள கணபதிபட்டி சாய் அமர் நகரில் வசித்து வந்தார். இவர் கேரளாவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் கால்நடைகளைப் பராமரித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் மேய்ச்சலுக்காக காட்டு பகுதிக்கு சென்றிருந்த போது திரும்பி வரவில்லை. இதுபற்றி இவரது மனைவி பினிதா ஒரான் தனது கணவரின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் காட்டுப் பகுதிக்குள் தேடிப் பார்த்தபோது மின்னல் தாக்கி பிமல் ஒரான் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி பினிதா ஒரான் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story