தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
நோய் பரவும் அபாயம்
நாமக்கல் மாவட்டம் குளக்கரை தெருவில் கொட்டப்படும் குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறி விட்டது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் நாட்களில் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேந்தர், நாமக்கல்.
வேகத்தடை வேண்டும்
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம் 18-வது வார்டு பாப்பம்பாடி- சேலம் மெயின் ரோடு சாலையில் வலயசெட்டிபட்டிக்குச் செல்லும் வழியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும். மேலும் வெள்ளை வர்ணம் அடிக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜேம்ஸ் கோபால், சேலம்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா வேப்பிலைப்பட்டி அரசு பள்ளியின் முன்பு உள்ள சாலையில் வேகத்தடை இல்லாததால் மாணவ- மாணவிகள் அச்சத்துடனே சாலையை கடக்க வேண்டிய உள்ளது. மேலும் அந்த பகுதியில் பள்ளி பகுதி என்ற அறிவிப்பு பலகையும் இல்லை. விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.
-கோ.சிவலிங்கம், வேப்பிலைப்பட்டி, சேலம்.
சேலம் மாவட்டம் ராஜாஜி சாலை செல்லும் பகுதியில் வாகனங்கள் மிகவும் அதிவேகம் செல்கின்றனர். 4 தெருக்கள் சந்திக்கும் முனையில் இருபுறமும் வேகத்தடை அமைத்தால் விபத்துகளை தடுக்கலாம். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சேலம்.
தீ வைக்கப்படும் குப்பைகள்
நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் பல நாட்களாக குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அந்த குப்பைகளை அள்ளாமல் துப்புரவு பணியாளர்கள் தீ வைத்து எரிக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள். எனவே துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை எரிக்காமல் அள்ளி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், நாமக்கல்.
கிணறு மூடப்படுமா?
சேலம் ஜாக்கிரெட்டிபட்டி 1-வது வார்டு பெரிய மோட்டூர் பாறை தாலுகாவில் பாழடைந்த கிணறு உள்ளது. காமநாயக்கன்பட்டி அபிராமி கார்டன் பகுதிக்கு செல்பவர்கள் இந்த வழியைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழியில் பாழடைந்த கிணறு உள்ளதால் உயிர் சேதம் ஏற்படும் முன் மாநகராட்சி அதிகாரிகள் இதனை மூட நடவடிக்கை எடுப்பார்களா?
-துரை, ரெட்டிப்பட்டி, சேலம்.
வீணாக செல்லும் குடிநீர்
சேலம் மாவட்டம் ஆத்தூர்- சேலம் மெயின்ரோடு ஓலப்பாடி செல்லும் வழியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் அங்குள்ள சாக்கடை நீருடன் கலந்து சாலையில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. எனவே இந்த குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி ரெயில்வே ரோடு அருகில் மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சேலம்.
எரியாத தெருவிளக்கு
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா புதூரில் ஒருவருட காலமாக தெருவிளக்கு எரியவில்லை. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த பகுதியில் அடிக்கடி திருடர்களின் தொல்லையால் இரவில் தூங்காமல் பயத்துடனேயே கடந்து செல்ல வேண்டிய உள்ளது. எனவே அந்த பகுதியில் உடனடியாக தெரு விளக்கை எரியச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.செல்வராஜ், புதூர், சேலம்.
குண்டும், குழியுமான சாலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆனந்தூர்-ஊத்தங்கரை செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக மோசமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் சிக்கி அடிக்கடி காயம் அடைகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும் இந்த சாலையால் மிகவும் சிரமப்படுகின்றன. எனவே அந்த பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் கவனம் கொள்ளவேண்டும்.
-வி.செந்தில்குமார், ஆனந்தூர், கிருஷ்ணகிரி.
காய்ச்சலால் ஏராளமானவர்கள் அவதி
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, குண்டலஅள்ளி கிராமத்தில் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது. மேலும் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் ஏராளமானவர்கள் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளனர். எனவே சுகாதார துறை அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், குண்டலஅள்ளி, தர்மபுரி.
ரேஷன் கடை அமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் ரேஷன் கடை இல்லாததால் பொருட்கள் வாங்க திருவாக்கவுண்டனூர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் நீண்டதூரம் உள்ள பக்கத்து பகுதிக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இது மிகுந்த சிரமத்தையும், கால விரயத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே அந்த பகுதியில் ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், சேலம்.
சாலை நடுவே பள்ளம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பழைய அன்னை சத்யா காலனியில் காவிரி குடிநீர் குழாய் உடைந்தது. அதனை சரி செய்தபின் அந்த இடத்தில் பள்ளம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சாலை நடுவே உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், ஓசூர்.
Related Tags :
Next Story