சேலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
சேலம், அக்.7-
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலியாகினர்.
பெயிண்டர்
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நடுவனேரி கிராமம் கோட்டை புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32), பெயிண்டர். இவர், வேம்படிதாளம் அருகே சேனைபாளையம் பகுதியில் ஒரு வீட்டுக்கு பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்குள்ள வயரில் மணிகண்டனின் கைபட்டுள்ளது.
இதில் மின்சாரம் தாக்கி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மணிகண்டன் திருமணமாகி மனைவியை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரீசியன் பலி
ஓமலூர் ஜெய்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). எலக்ட்ரீசியன். இவர் பெரமச்சூர் பகுதியில் உள்ள ராஜமாணிக்கம் என்பவரது வீட்டில் எலக்ட்ரிக் வேலை செய்து கொண்டார். அப்போது அவர் எந்திரம் மூலம் சுவரில் துளையிட்டார். திடீரென அவரை மின்சாரம் தாக்கியது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் மணிகண்டனை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story