கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2021 2:14 AM IST (Updated: 7 Oct 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்

மலைக்கோட்டை
திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் நேற்று மாலை சின்ன கடை வீதி, ஆண்டாள் தெரு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சின்ன கடை வீதி, ஆண்டாள் வீதி சந்திப்பு பகுதியில் ஒரு கார் நின்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தயாளன் காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அந்த காரில் கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரையும், அதில் இருந்த 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த துவாக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த தனசேகரன் (வயது 38), கீழ ஆண்டார் வீதியை சேர்ந்த உதயகுமார் (29), கீழ தேவதானம் வீரமுத்து நகரை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Next Story