மொபட்டில் ரேஷன் அரிசி கடத்திய முதியவர் கைது
ரேஷன் அரிசி கடத்திய முதியவர் கைது
நெல்லை:
நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் நெல்லை குலவணிகர்புரம்- மேலப்பாளையம் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மொபட்டில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் மேலப்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலபதி (வயது 62) என்பதும், அவர் 3 மூட்டைகளில் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரியவந்தது. உடனே வெங்கடாசலபதியை கைது செய்து, அவரிடமிருந்து ரேஷன் அரிசி மற்றும் மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story