கிருஷ்ணகிரி அணையில் தடையை மீறி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி கிருஷ்ணகிரி அணையில் தடையை மீறி நேற்று முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நேற்று பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதையொட்டி கிருஷ்ணகிரி அணையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் ஆற்றங்கரையோரம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மேலும் பசுவிற்கு வெல்லம் கலந்த அரிசி, அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழங்களை வழங்கி வழிபட்டனர். இதேபோன்று தென்பெண்ணை ஆற்றங்கரையோரம், பென்னேஸ்வரமடம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் தடையை மீறி ஆற்றில் நீராடி அந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் வழிபட்டனர்.
முன்னோர்களுக்கு திதி
அதே போல் கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதா, ஆஞ்சநேய சமேத ராகவேந்திரர் கோவிலில், பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். மகாளய அமாவாசையையொட்டி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் மற்றும் ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் பலர் பங்கேற்று சாமியை வழிபட்டனர்.
Related Tags :
Next Story