அரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர், மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை


அரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர், மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Oct 2021 7:06 AM IST (Updated: 7 Oct 2021 7:12 AM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அச்சல்வாடி பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 45). லாரி உரிமையாளர். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. திருநாவுக்கரசு கடன் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை திருநாவுக்கரசு வீட்டின் வெளிப்பகுதியிலும், பழனியம்மாள் வீட்டுக்கு உள்ளேயும் தூக்கில் பிணமாக தொங்கினர். அந்த பகுதி வழியாக சென்றவர்கள் கணவன்-மனைவி 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திருநாவுக்கரசின் மகன், மகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

இவர்கள் விரைந்து வந்து  தந்தை, தாய் ஆகிய 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது கடன் தொல்லையால் கணவன்-மனைவி 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Next Story