பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Oct 2021 9:23 AM IST (Updated: 7 Oct 2021 9:23 AM IST)
t-max-icont-min-icon

பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக நேற்று உத்திரமேருர், காஞ்சீபுரம், வாலாஜாபாத் பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று முடிவடைந்தது. வருகிற 9-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குன்றத்தூர் ஒன்றியம் போன்ற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பதற்றமான ஊராட்சி பகுதிகளான படப்பை, எழிச்சூர், வடக்குப்பட்டு, ஒரத்தூர், கரசங்கால், வஞ்சுவாஞ்சேரி, வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு அமைத்து தீவிர காண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
1 More update

Next Story