ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை - தன்னார்வலர்களுக்கு அழைப்பு


ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை - தன்னார்வலர்களுக்கு அழைப்பு
x

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கான தனி மருத்துவ ஆராய்ச்சிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி உள்பட 6 தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பக்கவிளைவுகளற்ற, உருமாறிய கொரோனா வைரசை எதிர்க்கும் வகையில் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அதில் ஒன்றாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகளை மேற்கொள்ள தனி ஆராய்ச்சிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் ‘மிஷன் கோவிட் சுரக்‌ஷா’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் தன்னார்வலர்கள் முன்வந்து, தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 

Next Story